தினகரன் முதல்வர். நான் தலைமைச்செயலாளர். ராம்மோகன் ராவ் அதிரடி

ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (23:59 IST)
தமிழகத்தின் தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அவர்களின் வீடு மற்றும் அலுவலகம் திடீரென வருமான வரித்துறையினர்களால் சோதனையிடப்பட்ட நிலையில் அவரது பதவியும் பறிபோனது. ராம்மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென கடந்த வாரம் மீண்டும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர்' பதவியை பெற்றார்.



 


ராம்மோகன்ராவுக்கு மீண்டும் பதவி கொடுத்தது குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த தலைமை செயலாளர்  நான்தான்' என்று ராம மோகன ராவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

.மேலும், சேகர் ரெட்டியின் சிறைவாசத்தை முடித்துவைக்கும் முயற்சியில் ராம மோகன ராவ் இறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்