மோடிக்கு வாய்த்த திறமையான அடிமைகள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்: துரைமுருகன் விளாசல்!!

புதன், 24 மே 2017 (09:38 IST)
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மோடிக்கு கிடைத்த திறமையான அடிமைகள் என்று கூறியுள்ளார்.


 
 
மதுரையில் திமுக சார்பாக கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்துகொண்டார். கருத்தரங்கம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பின்வருமாறு பேசினார், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 
 
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டத்தில், கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தபிறகு தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு வரும்.
 
தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடிக்குக் வாய்த்த திறமையான அடிமைகள் என்று துரைமுருகன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்