ஜெ. சுய நினைவோடு இருந்தார் ; என்னை பார்த்து சிரித்தார் ; மருத்துவர் பாலாஜி வாக்குமூலம்

சனி, 4 நவம்பர் 2017 (11:34 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கை ரேகை பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று மருத்துவர் பாலாஜி பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.


 

 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவில் ஜெ.வின் கை ரேகை இடம்பெற்றது தொடர்பாக, திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்து வழக்கில் மருத்துவர் பாலாஜி இரண்டாவது முறையாக நேற்று நீதிமன்றத்தில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவர் பாலாஜிதான் அவரிடம் கை ரேகை பெற்றார். இது தொடர்பாக, கடந்த அக்டோபர் 27ம் தேதி அவர் வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் கலந்துகொண்டார்.


 

 
அப்போது, அவரிம் திமுக வேட்பாளர் சரவணனின் வழக்கறிஞர் பல கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டார். அதில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு ‘இதை நான் மறுக்கிறேன்’ என மட்டும் பாலாஜி பதிலளித்தார்.
 
கைரேகை பெற்ற போது ஜெயலலிதா சுயநினைவோடுதான் இருந்தார். கை ரேகைப் பெறப்பட்ட ஆவணத்தில் தேதி மாற்றம் செய்தது உண்மைதான். கைரேகை பெற்ற போது சசிகலா அந்த அறையில் இல்லை. நான் சென்றதும் என்னை ஜெ.விடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் என்னை பார்த்து சிரித்தார். அப்போது வேட்பு மனு படிவங்களை அவரின் காட்டினேன். அதில் அவர் கைரேகை வைத்தார் என பாலாஜி கூறினார்.
 
கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் ஆஜரான போது, ஜெ.வின் கை ரேகை பெறும் போது அந்த அறையில் சசிகலா இருந்தார் என பாலாஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்னுக்குபின் அவர் சாட்சியம் அளித்ததாக கூறப்படுகிறது
 
பாலாஜி நேற்று அளித்த பதில் மூலம் ஜெ.வின் மரணத்தில் இன்னும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 10ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்