தீபாவுக்கு சரியும் செல்வாக்கு?

வெள்ளி, 3 மார்ச் 2017 (11:50 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சம்பவம் அனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே. சசிகலா தலைமையை ஏற்காத தொண்டர்கள்  ஜெ. அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என கூறினர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீ நகரில் உள்ள தீபா இல்லத்தில் குவியத் தொடங்கினர். விரைவில் அரசியல் திட்டம் குறித்து அறிவிப்பேன் என்று தொண்டர்களிடம் கூறிவந்தார்.


 

இந்த சூழநிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியினர் விலகினர். இதில் ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவிந்தனர்.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த 24ம் தேதி  எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தீபா தொடங்கினார். பேரவைக்கு கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலால் பெரும் சர்ச்சை எழுந்தன. தலைமைக்கு தேவைப்பட்டவர்கள் மட்டுமே நிர்வாகிகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொண்டர்கள் கூறினர்.

மேலும் தற்போதைய சூழநிலையில் தீபா ஓபிஎஸ் உடன் சேர்ந்தே அரசியல் பயணத்தை தொடரவேண்டும் என்று அவரது தொண்டர்களே கூறிவருகின்றனர்.

இதனால் எழுந்த சர்ச்சைகளால் தீபா வீட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படுகிறது. பேரவை துவங்கும் முன் இருந்த பரபரப்பு தற்போது இல்லை என்பது தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் தொண்டகளை தக்கவைக்க தீபா தரப்ப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர் என்று அரசியல் களத்தில் பரபரப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்