அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பதில் அனல் பறக்கும் யாகங்கள்: அ.தி.மு.கவின் அதிரடி என்ன?

புதன், 28 செப்டம்பர் 2016 (16:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எந்த நோயும் நெருங்க கூடாது என மனம் உருகி அதிமுகவினர் பிரார்த்தனை செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழக அளவில் சட்டசபை தேர்தலை முடித்து கொண்ட தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலிலும், வேட்பு மனு பெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
 
எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. ஆனால், அ.தி.மு.கவினரோ, தங்களின் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, பூரண குணமடைந்து இனி எந்த நோய்களும் அவரை நெருங்கக்கூடாது என்று விஷேச யாகங்கள் செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று பல்வேறு இடங்களில் தீவிர பிரார்த்தனைகளும், விஷேச யாகங்களும் நடத்தி வருகின்றனர். 
 
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று இரவு தெரிந்தவுடனே, கரூர் நகர அ.தி.மு.க சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முதல், சின்னபள்ளி வாசல் மசூதி, மாரியம்மன் கோயில், புனித தெரசாம்மாள் தேவாலயம் என்று ஆங்காங்கே விஷேச வேண்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 


 

 
மேலும், ஆறவது நாளான இன்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மஹா விருத்தி ஜெயம் ஆயுத்திய அஸ்திரய யாக பூஜை  கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும்  தமிழக போக்குவரத்து அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 
 
அதை தொடர்ந்து  சிறப்பு பூஜைகள்  அபிஷேகங்கள் நடைபெற்றன. கரூரில் நடந்த சிறப்பு பூஜைகளில் எராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அனல் பறக்கும் யாகம், கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதன், கரூர் ஒன்றிய செயலளர் கமலக்கண்ணன், நகர இளைஞரணி செயலாளர் சேரன் பழனிச்சாமி, நகர இலக்கிய அணி செயலாளர் சரவணன், கரூர் நகர எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி ஆயில் ரமேஷ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த யாகமானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு, அ.தி.மு.கவினரும் கலந்து கொண்டனர். 
 
எந்த ஒரு பக்தர்களுக்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற இந்த யாகத்தில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைவதோடு, எந்த நோயும், அவரை அண்டாதவாறு இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. 
 
ஆனால் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இது போன்ற நிலை ஏற்பட்டால், சந்தேகம் என்கின்றனர் நடுநிலையாளர்கள். அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பதில் அனல் பறக்கும் யாகத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினரை கண்டு பொதுமக்கள் சிந்தித்து வருகின்றனர். 
 
ஒரு முதல்வருக்காக தமிழக மக்களே வேண்டுதல் நடத்துகின்றது என்பது கரூர் மாவட்ட அ.தி.மு.க மூலம்தான் தெரிகின்றது என்கின்றனர் பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும். 

வெப்துனியாவைப் படிக்கவும்