திமுக என்றால் கருணாநிதி மற்றும் ஸ்டாலின். அதிமுக என்றால் ஜெயலலிதா. இது வழக்கமான ஒன்றுதான். தற்போது ஜெ. மறைந்துவிட்டதால் அதிமுக தனது அடுத்த தலைமை நோக்கி பயணிக்கிறது. ஜெ.வின் நீண்ட வருட தோழி சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வரை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் விளைவாக, அதிமுகவினர் தங்கள் சட்டைப் பாக்கெட்டில் சசிகலாவின் படங்களை வைக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது அவர்கள் சட்டைப் பாக்கெட்டில் இரண்டு படங்கள் இருக்கிறது. முதலில் ஜெ.வின் படமும், அதன் பின்னால் சசிகலாவின் படமும் இடம் பெற்றுள்ளது.