29‌ஆம் தே‌தி முத‌ல் மழை பெ‌ய்யு‌ம்

வெள்ளி, 27 ஜூன் 2008 (17:18 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யத் துவங்கும்.

மழை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் எமது தமிழ்.வெப்துனியா.காமிற்கு மழை கணிப்பை அனுப்பியுள்ளார்.

அதன்படி, ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யத் துவங்கும்.

ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

ஜூலை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும்.

இதே காலக்கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை முதல் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், கேரளாவின் கண்ணூர், மாகி, கோழிக்கோடு பகுதிகளில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை மாதம் 8ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்