ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
செவ்வாய், 31 ஜூலை 2012 (20:29 IST)
ஜுலை 29 ம்தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் ஜுலை 31 முதல் வடக்கு ஆந்திரா, ஒரிஸா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதனால் கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் மத்திய கேரள பகுதிகளிலும், மத்திய இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரையும், ஆகஸ்ட் 8 ம்தேதி முதல் 10 வரையும், 12 முதல் 17 வரையும், 23 முதல் 28 வரையும் பெரும்பாலான நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு ஆந்திரா, ஒரிஸா ஆகிய பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 3 ம்தேதி முதல் 5 ம்தேதி வரையும் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை கணிப்பின்படியும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும் ஆகஸ்ட் 1 ம்தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.