2015 -இல் வைரலான தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் காணொளிகள் (வீடியோ இணைப்பு)

வியாழன், 31 டிசம்பர் 2015 (15:40 IST)
திருமண நிகழ்ச்சியில் சுப்ரமணியன் சாமியின் குறும்பு....

2015 இல் பரபரப்பு மற்றும் நகச்சுவையை ஏற்படுத்திய அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளில் சுப்ரமணியன் சாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுப்பதற்கு பதிலாக மணமகளுக்கு தாலி கட்ட முற்பட்டது முதன்மையானது.
 
நன்றி விகடன்
 
 
நெல்லையில், திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுப்பதற்கு பதில், மணமகளுக்கு அவரே தாலி கட்ட முயன்ற சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சுப்பிரமணியன் சாமி, நெல்லையில் கொஞ்ச நேரம் தாமதம் செய்து இருந்தாலும், திருமண வீட்டில் தமிழகமே எதிர்பாராத வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார்.


அதிர வைத்த சேலம் ஆட்சியர் சம்பத்.....



மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி அதிக மழை பெய்துள்ளது என சேலம் ஆட்சியர் சம்பத் பேசி அனைவரையும் அதிர வைத்தார்.

 

நன்றி தினமலர்
 
அவரது பேச்சு தமிழகம் முழுவதும் வைரலாக பரவியது. தமிழக அரசின் எந்த ஒரு செயல்பாடுகளாக இருக்கட்டும் எல்லாமே அம்மாவின் ஆணைக்கினங்க என்று கூறிதான் அதிமுக அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் சேலம் மாவட்ட கலக்டர் சம்பத் அதிமுகவினரையே மிஞ்சும் அளவுக்கு மழையே அம்மாவின் ஆணைப்படி தான் அதிகமாக பெய்தது என பேசி ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் சிறந்த பொழுதுபோக்காக மாறினார்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

தூக்கி அடிச்சிருவேன்..............

தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க என்ற வசனம் 2015 இல் மிகவும் பிரபலமான அதிகமாக பலராலும் உச்சரிக்கப்பட்ட வசனம்.

 
நன்றி ரெட் பிக்ஸ்
 
தமிழக பிரச்சனைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது தான் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தூக்கி அடிச்சிருவேன் வசனம் தமிழக மக்களுக்கு கிடைத்தது.
 
செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து கேள்விகளை கேட்டார். இதனால் திடீரென்று கோபமடைந்த விஜயகாந்த், உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு என்று கூறினார். ஆனாலும் மீண்டும் விடாப்பிடியாக் அந்த நிருபர் கேள்விகளை கேட்க, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே என்றும், சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி அடித்து விடுவேன் என்றார்.


கேமரா தான் எனக்கு முக்கியம்....


அமெரிக்காவில் கேமராவை மறைத்த  பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கை பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி 2015 இல் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
 
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கை சந்தித்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேஸ்புக் அலுவலகத்திற்குள் மோடிக்கு பெண் ஒருவர் பரிசு வழங்கினார். அருகில் மார்க் ஜூக்கர்பெர்க்கும் உடனிருந்தார். பரிசளிப்பு நிகழ்வை அங்கிருந்த கேமரா மேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
 
ஆனால் கேமராவை மார்க் ஜூக்கர்பெர்க்கர் மறைத்ததாக தெரிகிறது. இதனை மனதளவில் உணர்ந்த மோடி மார்க் ஜூக்கர்பெர்க்கை வலுக்கட்டாயமாக இழுத்து கேமராவின் பார்வையில் இருந்து அவரை அப்புறப்படுத்தினார்.
 
கேமராவை மறைத்த மார்க் ஜூக்கர்பெர்க்கை அப்புறப்படுத்தி கேமாராவுக்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடியின் வீடியோ 2015 இல் வைரலான முக்கியமான வீடியோக்களில் ஒன்றாகும். சமூக வலைதளங்களில் பலரும் இதை பகிர்ந்து மோடியை கிண்டல் செய்தனர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி.........

2015 இல் நடிகை ஊர்வசி குடிபோதையில் கேரள சட்டமன்ற பெண் உறுப்பினர்கள் சங்க துவக்க விழாவில் போதையில் உளறியதும், நிகழ்ச்சி பொருப்பாளர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும் வீடியோவாக இணையத்தில் வைரலாக பரவியது.

 


 
புலி.... இது டி.ராஜேந்திரனின் கலக்கல், கலாய்த்த புலி

 
இது சிறப்பான புலி, இது சிவப்பான புலி, இது செம்புலி, இது சீறும் புலி, இது அரும் புலி, இது பெரும்புலி, இது தமிழ் இன புலி, இது வெற்றி புலி, இது வேட்டை புலி, இது கலைப் புலி, களங்கமில்லா புலி..... 2015 இல் பரவலாக வைரலான வீடியோக்களில் லட்சிய திமுக கட்சியின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்திரர் புலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியது முக்கியமானது.
 

 
அவர் விஜய்யை புகழ்ந்து பேசியதில் அரங்கமே அதிர்ந்து பாராட்டுக்களை பெற்றாலும், பின்னர் அவர் பேசிய புலி என முடியும் அடுக்கு மொழி வசனம் அவரை கலாய்க்கும் விதமாகவே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலானது.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நடந்து கொண்டிருந்த பிரதமர்.....


ரஷ்யா சென்ற பிரதமர் மோடி தேசியகீதம் இசைக்கப்பட்ட போது நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
 
ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கும் விதமாக, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, இந்திய தேசிய கீதம் ரஷ்யா வீரர்களால் இசைக்கப்பட்டது. இந்திய தேசியகீதம் இசைக்கப்பட்டதைக் கூட கவனிக்காமல் பிரதமர் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் மோடியை ஓடி சென்று தேசிய கீதம் இசைக்கப்படுவதை சுட்டிக்காட்டி அவரை தடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

வெப்துனியாவைப் படிக்கவும்