இலங்கையில் ராஜபக்‌ஷே ஆட்சிக்கு முடிவு

புதன், 23 டிசம்பர் 2015 (11:48 IST)
இலங்கையில் மகிந்த ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்கு முடிவுகட்டி மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானார்.


 
 
2015 ஜனவரி 9 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா அறிவிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்‌ஷே தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்து தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளால் இலங்கை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
 
2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் மகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார். அதேவேளையில் ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிர்க்கட்சியினர் ராசபக்சவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தனர்.
 
மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றதை அடுத்து 2015 ஜனவரி 9 ஆம் தேதி புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார். ராஜபக்ச 47.58% வாக்குகள் பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்