விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி பிரமுகர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அருட்செல்வன் கலந்துகொண்டார்.