மீண்டும் தலைதூக்கும் ஸ்டிக்கர் கலாச்சாரம் (வீடியோ)

சனி, 6 மே 2017 (15:19 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் 21 நபர்களுக்கு 21 மூன்று சக்கர டி.வி.எஸ் ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 


 

 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் ஸ்டிக்கராக அந்த மூன்று சக்கர வாகனத்தில் இல்லை என்று கூறியதோடு, அனைவரையும் கூட்டரங்கிற்கு அழைத்து சென்றார். அங்கு உடனடியாக அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு மூன்று சக்கர மோட்டர் வாகனம், ஒரு மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது.
 
ஆனால் அந்த மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்ட ஹெல்மெட்டில் அம்மா ஸ்டிக்கர் இல்லை. உடனடியாக கோபப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அனைத்து வாகனங்களுக்கும், ஹெல்மெட்டிற்கும் அம்மா (ஜெயலலிதா) வின் ஸ்டிக்கர் இல்லாமல் ஒரு வாகனம் கூட வெளியே செல்லக்கூடாது என்ற பிறகு அனைத்து வாகனத்திற்கும் அரசு அலுவலர்கள், அரசு அதிகாரிகள் ஒட்டி பின்னர் கொடுத்து அனுப்பினர். ஒரு சில சமுக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பும், ஸ்டிக்கர் கலாச்சாரத்தை அரசு அதிகாரிகள் மறந்து விட்டாலும் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறக்கவில்லையே என்று புலம்பிய படி கலைந்து சென்றனர்.
 

 
சி.ஆனந்தகுமார் - கரூர்

வெப்துனியாவைப் படிக்கவும்