கேன்சர் விழிப்புணர்வில் ஹன்சிகா, சமந்தா

புதன், 12 ஜூன் 2013 (17:23 IST)
FILE
கேன்சர் இப்போது நீ‌ரிழிவு நோய் போல் ஆகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் கேன்சர் பாதித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

இரண்டு டஜன் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி கூடுதலாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தூதராகவும் செயல்படுகிறார். பெண்களை தாக்கும் கேன்ச‌ரில் மார்பக புற்றுதான் முதலிடம் வகிக்கிறது.

இரண்டாவது கருப்பை வாய் புற்றுநோய். சமீபத்தில் இந்த புற்றுநோய் வராமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டார் சமந்தா. அதனை சைலண்டாக வைத்திராமல் தனது ட்விட்ட‌ரில் வெளிப்படையாக தெ‌ரிவித்தவர், பயத்தில் போட்டுக் கொண்டதல்ல வருமுன் காப்பதற்காக போட்டுக் கொண்டது என தெ‌ரிவித்துள்ளார். இதனை அனைத்துப் பெண்களும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தெ‌ரிவித்துள்ளார்.

சமந்தாவின் இந்த ஸ்டேட்மெண்டுக்குப் பிறகே பல பெண்களுக்கு கேன்சர் தடுப்பூசி என்ற ஒன்று இருப்பதே தெ‌ரிய வந்துள்ளது.

அந்தவகையில் மிகப்பெ‌ரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்