வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கும் - சத்ய நாதெல்லா

செவ்வாய், 19 மே 2020 (21:35 IST)
கொரோனா காலத்தில் உலகமெங்கிலும் உள்ள மக்கள் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், டுவிட்டர், போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வரும் அக்டோபர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து சத்ய நாதெல்லா கூறியுள்ளதாவது :

வீட்டிலிருக்கும் வேலை பார்க்கும் சூல்நிலை நிரதரமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டால் , அது தொழிலாளர்களின் மனநிலையை பாதிக்கும். மேலும் இந்த சமூகத்துடன் உள்ள தொடர்பை அவர்கள் இழக்க நேரிடும். அருகில் அமர்ந்து கொண்டு பிறருடன் பேசி கலந்துரையாடுவது போன்ற அனுபவம் நிச்சமயாக வீடியோ அழைப்புகளின் பணியாற்றவோருக்கு வராது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்