கொன்னது நாங்க தான் ஆனா பாடி எங்ககிட்ட இல்ல! மழுப்பும் சவுதி அரேபியா

திங்கள், 22 அக்டோபர் 2018 (14:49 IST)
பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொல்லப்பட்டது உண்மை தான் எனவும் அவரின் உடல் எங்கிருக்கிறது என எங்களுக்கு தெரியாது எனவும் சவுதி அரேபியா கூறியுள்ளது.
 
சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளரான ஜமால்கசோஜி காணாமல் போனார். அவர் தொடர்ந்து சவுதி அரேபிய அரசை விமர்சித்து பேசி வந்ததால், சவுதி அரேபியா தான் ஜமாலை ஏதோ செய்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தொடந்து இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது.
 
இந்நிலையில் தற்பொழுது ஜமால்கசோஜி இறந்துவிட்டதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. சில தீவிரவாத அமைப்பினர் ஜமாலை கொன்றுவிட்டதாக சவுதி அரசு கூறியுள்ளது. மேலும் இந்த கொடூர நிகழ்விற்கும் அரசுக்கும் சம்மந்தமில்லை எனவும் கூறியுள்ளது. 
 
மேலும் கொலை செய்யப்பட்ட ஜமால்கசோஜியின் உடல் எங்கிருக்கிறது என தங்களுக்கு தெரியாது என சவுதிஅரேபியா கூறியுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் சவுதிஅரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்