கொரோனாவால் குறைந்த வெளிநாட்டு அட்மிசன்கள்! – அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (09:07 IST)
அமெரிக்காவில் கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டை எட்ட உள்ளது. இன்னமும் கொரொனாவிற்கு சரியான தடுப்பு மருந்து கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பில் அமெரிக்காவே முதலில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க பல்கலைகழகங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகள் திரும்பி விட்டனர். மேலும் ட்ரம்ப் அரசாங்கம் ஹெச்1பி விசாவிற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வருவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை 44 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவிலிருந்து மட்டும் 4.4 சதவீதம் மானவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கையை மொத்தமாக அடுத்த ஆண்டில் தொடங்கலாம் என அமெரிக்க கல்வி நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்