மாணவர்களின் தற்காப்புக்கு பள்ளிகளில் கற்கள் வினியோகம்

சனி, 24 மார்ச் 2018 (12:00 IST)
அமெரிக்காவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வகுப்பறையில் கற்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
அமெரிக்காவின்  ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரழந்தனர்.
 
இதனையடுத்து  புளோரிடா மாகாணத்தில் பென்சில் வேனியாவில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தற்காப்புக்கு கற்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆற்றுப் படுகையில் இருந்து சேகரிக்கப்பட்ட கருங்கற்கள் வாளிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
 
துப்பாக்கியோடு பள்ளியில் நுழையும் நபர் மீது கற்களை கொண்டு சரமாரி தாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகவலை புளோரிடா மாகாண கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பு பலரது ஆதரவை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்