இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர்வாரா? நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு இடைக்கால தடை

திங்கள், 3 டிசம்பர் 2018 (20:31 IST)
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார்

இந்த நிலையில் இதுகுறித்து ரணில் தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் மட்டுமின்றி அமைச்சர்களும் பதவியில் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இலங்கை பிரதமராக தொடர இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என்றும், இலங்கை பிரதமராக தொடர இடைக்காலத் தடை விதித்ததை ஏற்கமாட்டோம் என்றும், ராஜபக்சே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்