'டாப் டக்கராக’ மாறிய ஜப்பான் பாஸ்போர்ட்... இதோட கெத்துக்கு சான்ஸே இல்ல...

புதன், 10 அக்டோபர் 2018 (17:52 IST)
ஹென்லி என்ற அமைப்பு சர்வதேச  விமான போக்குவரத்து சங்கத்துடன் சங்கத்துடன் இணைந்து பஸ்போர்ட் ரேங்க் எனும் பெயரில் உலக அளாவிலான பாஸ்போர்டுகள் குறித்த தர நிர்ணய அடிப்படையில் அட்டவணை ஒன்றை வருடம் தோறும் வெளியிடுகிறது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியைலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது அதில் ஜப்பான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதாவது ஜப்பான் நாட்டினுடைய பாஸ்போர்ட் வைத்திருப்போர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின் போது விசா பெற்றுக்கொள்வதற்கேற்ற வகையில் இந்த விசாவின் சிறப்பம்சம் உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு சிங்கப்பூர் இந்த இடத்தில் இருந்தது. தற்போது ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
இந்த அட்டவணையில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நாடுகள் பின்வறுமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
1)ஜப்பான்
2)சிங்கப்பூர்
3)ஜெர்மனி,
தென்கொரியா,
பிரான்ஸ் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
4)இங்கிலாந்து 
5)அமெரிக்கா 
 
மேலும் நம் இந்தியா இந்த தர வரிசை பட்டியலில் 81 வது இடத்தில் உள்ளது.
நம் நாட்டு விசாவைத்திருப்போர் 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது வருகையின் போது பெற்றுக்கொள்ள ஏதுவாக வசதிகள் உள்ளது என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்