நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பொது மக்கள் பீதி

ஞாயிறு, 21 ஜூலை 2019 (09:34 IST)
நியூஸிலாந்து நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

நியூஸிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதே போல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவிலும் நேற்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்