தலைவி பட நடிகை மற்றும் அவரது சகோதரிக்கு போலீஸார் சம்மன்….

புதன், 21 அக்டோபர் 2020 (20:35 IST)
ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் குறித்து தவறான கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைத்து மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கங்கனா ரனாவத் மீது மும்பை நீதி மன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.

தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் டுவிட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள்
மூலம் சினிமா கலைஞர்களிடையேயும் மக்களிடையேயும் மத அடிப்படையிலும் பிரிவு ஏற்படுத்த முயல்வதாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ராங்கோலி சாண்டல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மும்பை நீதிமன்றத்தில், பொதுவெளியில் மக்களின் மத உணர்வுகலைத் தூண்டுவதாகவும், பகைமை உணர்வுகளைத் தூண்டுவதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது.

எனவே இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டோலி மீது எஃப் ஐஆர் பதிவு செய்த மும்பை போலீஸார் இருவரும் நாளை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்