ஆரோக்கியம் தரும் இஞ்சி சட்னி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
இஞ்சி - 1/2 கப் நறுக்கியது
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - ஒரு கோலி அளவு
வெல்லம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கடுகு - சிறிதளவு
செய்முறை:
 
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ப்ரு பாத்திரத்தில் ஊறவைத்துக் கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து  வைத்துக் கொள்ளவும்.
 
பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்