கழிவறைகளை வாஸ்துப்படி அமைக்கக்கூடாத இடங்கள் எவை...?

குளியலறை அமையக் கூடவே கூடாத மூன்று இடங்கள் உள்ளன. அதில் ஒன்று  பிரம்ம ஸ்தானம். அதாவது வீட்டின் வயிற்றுப்பாகம்.  வீட்டின் மையத்தில் குளியலறை அமைப்பது தவறாகும். இதனால் எண்ணற்ற இன்னல்கள் உண்டாகும். 
அதுபோல மற்ற இரு பகுதிகள் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு. இவ்விடங்களில் குளியலறை-கழிவறை அமைந்தால், மருத்துவ செலவுகள், ஆபத்தான அறுவை சிகிச்சைகள், திடீர் விபத்துகள், பெரும் கடன் தொல்லை, பொருள் இழப்பு போன்றவை அதிகம் தரும்.
 
வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம். டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக  அமைக்கவேண்டும்.
 
ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும். கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
 
பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும். குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்