விவேக் ஆசை நிறைவேறுமா? எல்லாம் இயக்குநர் ஷங்கர் கையில் !

வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:25 IST)
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் முதன்முறையாக நடிகர் விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பதாக இருந்த நிலையில், இந்தியன்2 படம் மீண்டும் தொடங்குமா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், விவேக் ஆசை நிறைவேறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன்2. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ஏன் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை ; இந்தியன்2 படத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனவே இந்தக் கொரோனா காலத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை எனத் தகவல் வெளியானது..

இந்நிலையில் இப்படத்தின் முதன் முதலாக விவேக் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டார். அப்போது, இந்தியன் 2 பட ஷுட்டிங்கின்போது, அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது.

மேலும், நடிகர் விவேக் நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். இப்படத்தில் அவரது ஆசை நிறைவேறிய போதிலும் துரதிஷ்ட வசத்தால் அவர் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஷங்கர் இந்தியிலு, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்தியன்2 படம் எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்த நிலையில், லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 150 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிட்டிருந்த நிலையில் இப்படம் தற்போது ரூ.236 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனாலும் தற்போது 80% பணிகளை மட்டுமே ஷங்கர் முடித்துள்ளார். இப்படத்தின் மீதிப்பணிகளை முடிக்கும் வரை பிறபடங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றம் , இருதரப்பு விளக்கங்களையும் கேட்டறிந்த பின், இரு தரப்பினரும் சுமூகமாகப் பேசித் தீர்வுகாணும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் ஷங்கர் தொடங்கி விவேக் ஆசை நிறைவேறுமா எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்