சூர்யாவின் சூரரைப் போற்று படம் வெளியாவதில் தாமதம் ஏன்?

வியாழன், 22 அக்டோபர் 2020 (16:43 IST)
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இப்படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது.

எனவே சமீபத்தில் இப்படத்தில் சில நிமிட வீடியோ காட்சிகளும்  பின்னணி இசையும் சமூக வெளியிடப்பட்டு ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிச் சரித்திடம் படைத்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளதால் இந்திய விமாப்படை தரப்பில் இருந்து ஒப்புதல் வர சற்று தாமதமாகவே படக்குழு காத்திருக்கிறார்களாம்.

இக்கடிதம் வெளியான பிறகுதான் இப்படத்தை விளம்பரப்படுதும் பிரமோசன் வேலையில் படக்குழு ஈடுபடும் எனத் தெரிகிறது. இதனால் படவெளியீடு சற்றுத தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்