இமைக்கா நொடிகள் - திரைவிமர்சனம்

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (17:51 IST)
டிமாண்டி காலானி என்ற படத்தை இயக்கி வெற்றி இயக்குனரான அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படைப்பு இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.
 
மேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு மிரட்டல் விடுகிறார். இதனையடுத்து அனுராக் கூறியது போலவே தொடர் கொலைகள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அதர்வா காதலித்த ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். இது நயன்தாராவிற்கு மேலும் சிக்கலை தருகிறது. 
 
அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? நயன் தாரா அவரை கைது செய்தாரா? அதர்வா தப்பித்தாரா? ராஷி கண்ணா மீட்கப்பட்டாரா? என பல கேள்விகளுடன் கதை நகர்கிறது.  
 
வாரம் வாரம் நயன்தாராவை திரையில் பார்த்துவிட முடிகிறது. அந்த அளவிற்கு பல படங்களில் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தி சிபிஐ ஆபிஸ்ராக மிரளவைக்கிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மயக்குகிறார். 

 
அனுராக் காஷ்யுப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார். 
 
அதர்வா - ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை. சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. 

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படிதான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.
 
பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் இமைக்கா நொடிகள் ரசிகர்கள் கொண்டாடும் தில்லர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்