நான் எங்கு அனுஷ்காவை குறை சொன்னேன்… சுனில் கவாஸ்கர் பதில் கேள்வி!

சனி, 26 செப்டம்பர் 2020 (16:42 IST)
கோலியின் மோசமான பேட்டிங் பற்றி விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர் அனுஷ்கா சர்மாவை கேலி செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஆர் சி பி கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங்க் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழக்கையை கேலி செய்யும் விதமாக ஆபாசமாக பேசினார். அதில் ‘கோலி லாக்டவுன் சமயத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துவீச்சில்தான் பயிற்சி செய்தார் போல’ எனக் கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த அவரை வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது கவாஸ்கருக்கு பதிலளிக்கும் விதமாக அனுஷ்கா ‘மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. நிச்சயமாக நீங்கள் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க முடியும். ஜெண்டில்மேன்களின் ஆட்டத்தில் உங்கள் பெயர் மிகப்பெரிய இடத்தில் உள்ளது.’ எனக் கூறியுள்ளார். கோலி 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சரியாக விளையாடாத போதும் இதுபோல அனுஷ்கா சர்மா  மேல் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார். அதில் ‘நான் அவரைக் குறை கூறவில்லை. அவர் வெளியிட்ட வீடியோவில் கோலிக்கு அனுஷ்கா பந்துவீசிய காட்சி இருந்தது என்றுதான் கூறினேன். ஊரடங்குக் காலத்தில் அதுபோன்ற ஒரு பந்துவீச்சையே கோலி எதிர்கொண்டார் என்றேன். கோலியின் மோசமான ஆட்டத்துக்கு நான் எங்கே அனுஷ்காவைக் குறை கூறியிருக்கிறேன்.’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்