ரஜினி படத்தை அடுத்து தனுஷ் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (18:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் தயாராக இருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களும் வெளியாகி விட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சற்றுமுன் தனது டுவிட்டரில் வெளியிட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கவிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் முதல் படம் இந்த படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

We are happy to announce @dhanushkraja’s #D44BySunPictures pic.twitter.com/gU5yrcedvd

— Sun Pictures (@sunpictures) December 15, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்