தீர்ந்தது சிவகார்த்திகேயன் பட பிரச்சனை: தீர்த்து வைத்த சன் டிவி

சனி, 16 மே 2020 (08:05 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய சுமாரான வெற்றியைப் பெற்றது. பிஎஸ் மித்ரன் இயக்கிய முதல் திரைப்படமான ’இரும்புத்திரை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மட்டும் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருந்தது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’ஹீரோ’ படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த வழக்கின் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விட்டதால் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டலில் ஒளிபரப்ப மட்டும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது
 
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ’ஹீரோ’ படத்தை வாங்கிய சன் டிவிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சன் டிவி இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் வழக்கு தொடர்ந்தவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து தற்போது இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து சன் டிவியில் ’ஹீரோ’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் பிரச்சனையை தீர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாக் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்