இரவோடு இரவாக மறு தணிக்கைக்கு செல்கிறது 'சர்கார்'

வியாழன், 8 நவம்பர் 2018 (22:40 IST)
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 'கோமளவல்லி' என்ற பெயரை மியூட் செய்யவும், அரசின் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சியை நீக்கவும் சம்மதம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இரவோடு இரவாக ஆன்லைன் மூலம் சென்சாருக்கு விண்ணப்பிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. நாளை காலை சென்சார் அலுவலக அதிகாரிகள் இந்த மாற்றத்தை உறுதி செய்து மறு தணிக்கை சான்றிதழ் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மதிய காட்சி முதல் மாற்றப்பட்ட 'சர்கார்' திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பலத்த எதிர்ப்பு காரணமாக இந்த படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதால் வரும் சனி, ஞாயிறு நல்ல கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளைக்குள் இந்த சென்சார் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்