சர்கார் சர்ச்சை: ஜெ.மரணத்தில் மர்மம் - வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல சேனல்

வெள்ளி, 9 நவம்பர் 2018 (15:18 IST)
விஜய் முருகதாஸ் கூட்டணியில்  தீபாவளி அன்று  வெளியாகிய சர்கார் படம்  நல்ல விமர்சனங்களை பெற்றது. உலகளவில் வசூலை ஈட்டியுள்ள நிலையில் பல சர்ச்சைகளையும்  சந்தித்து வருகிறது. 
 
சர்காரின் வசூல் பாக்ஸ் ஆஃபீஸ் காலெக்ஷனை பெற்று அமோக வசூலை ஈட்டி வருகிறது.  மேலும் படத்திற்கு ஏற்பட்டுள்ள சர்ச்சைகளால் இன்னும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது படத்தின் சில காட்சிகள் அரசியல் சர்ச்சைகளை சந்திதது. ஆளும் கட்சியின் மிரட்டலால் படத்திலிருந்து கோமளவல்லி என்ற பெயர் மியூட் போடப்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச நலதிட்டங்களை எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தி சேனல் ஜெயலலிதாவின்  மரணத்தில் மர்மம்! என்றும், இதுவரை வெளிவராத அதிரவைக்கும் உண்மைகள் என புலன் விசாரணை நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
 
ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணம் மர்மாக இருப்பதால் மக்கள் பலரும் ஆளும் கட்சியினர் மீது கடும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்