செல்லக்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் சமந்தா - வீடியோ!

சனி, 20 ஜூன் 2020 (14:06 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என்னுடைய பொழுதுபோக்கு என்ன என்பதை இந்த லாக்டவுன் எனக்கு கற்றுத்தந்து என கூறியிருந்தார். இந்நிலையில் தற்ப்போது தான் செல்லப்பிராணிகளுடன் கார்டனில் விளையாடும் அழகிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️ @shilpareddy.official God bless

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்