சக தயாரிப்பாளருக்காக விட்டுக்கொடுத்த ஆர் பி சௌத்ரி!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:06 IST)
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸாக இருந்த களத்தில் சந்திப்போம் மற்றும் கபடதாரி ஆகிய திரைப்படங்களுக்கு போதுமான அளவுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உருவானது.

இந்நிலையில் கபடதாரி படத்தின் தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் களத்தில் சந்திப்போம் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியிடம் சென்று பேசி நிலைமையை விளக்கி சொன்னதும் தனது படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துக் கொள்வதாக சௌத்ரி பெருந்தன்மையாக சொல்லிவிட்டாராம். இதனால் ஜனவரி 28 ஆம் தேதி கபடதாரி திரைப்படம் மட்டுமே ரிலீஸாகவுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்