கர்ணன் படக்குழுவினரை சந்தித்து பாராட்டிய பிரசாந்த்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:37 IST)
நடிகர் பிரசாந்த் கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோரைப் பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.

இதையடுத்து சினிமாத்துறையினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர் கர்ணன் படக்குழுவினர். ஏற்கனவே நடிகர் விக்ரம் மாரி செல்வராஜை வீடு தேடி சென்று பாராட்டிய நிலையில் இப்போது நடிகர் பிரசாந்த் கலைப்புலி தாணுவின் அலுவலகத்தில் மாரி செல்வராஜை சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்