ஒரே ஒரு முறை கையசைத்து பல கோடிகளை இழந்தேன் - புலம்பும் நமீதா

திங்கள், 6 ஜூலை 2020 (10:14 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்ககளில் கவர்ச்சி நடனம், கவர்ச்சி காட்சிகளில் மட்டும் நடித்து தனக்கென ரஹணி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதையடுத்து புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பின்னர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழக ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது நடிகை நமீதா தன் வாழ்வில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அதவது, நமீதா பீக்கில் இருக்கும் போதே அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்தார். அப்போது அனைத்து மாவட்டத்திலும் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேச ஜெயலலிதாவிடம் இருந்து நமீதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி நமீதா ஒரு மேடையில் பேச சென்றபோது ஜெயலலிதா இருக்கும் போதே மேடையில் எல்லோருக்கும் கை அசைத்துள்ளார்.

அவ்ளோவ் தான் அன்றிலிருந்து அவரை எந்த கூட்டத்திற்கும் அழைத்து வரவேண்டாம் என ஜெயலலிதா கூறி விட்டாராம். நமீதாவிற்கு ஒரு கூட்டத்தில் பேச  ரூ 5 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம் அது அத்தனையும் தான் கையசைத்து இழந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்