KGF பட ஹீரோவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - கியூட் புகைப்படம் இதோ!

புதன், 30 அக்டோபர் 2019 (13:09 IST)
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  


 
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  அதுமட்டுமின்றி  இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி  கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
தற்போது  இப்படத்தின் இரண்டாம் பக்கம் உருவாகி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் யாஷிற்கு கடந்த வருடம்  அய்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்