இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது: பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

புதன், 30 செப்டம்பர் 2020 (16:56 IST)
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானதில் இருந்தே அரசியல் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்கே அத்வானி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
குறிப்பாக தமிழக அரசியல் கட்சியைச் சேர்ந்த திமுகவின் முக ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாலர் வைகோ உள்பட பலர் தீர்ப்பு குறித்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் இந்த தீர்ப்பு குறித்து கூறியிருப்பதாவது: நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.
 
கமல்ஹாசனின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்