5 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாக உள்ள விஜய் சேதுபதி திரைப்படம்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:00 IST)
விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் இப்போது ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியப் படம் இடம் பொருள் ஏவல். இப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்தனர். படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகும் போது படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்க படம் ரிலீஸாவதில் தாமதமாகிக் கொண்டே வந்தது. லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் படங்களின் தோல்வியால் மீள முடியாத கடனில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் இப்போது அந்த திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது அந்த படம் சம்மந்தப்பட்ட குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்