சுயலாபத்துக்காக 'தேவர் மகன் 2' வை எதிர்ப்பதா? கருணாஸ் கண்டனம்

வெள்ளி, 9 நவம்பர் 2018 (10:57 IST)
இந்தியன் 2 படத்தை அடுத்து தேவர் மகன் 2 படத்தை எடுக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் கிருஷ்ணசாமி, தேவர்மகன் என்று எடுக்காமல், தேவேந்திரர் மகன் என்று எடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதனிடையே, நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது:"எந்த மாதிரியான படம் எடுக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளரும் நடிகரும்தான் முடிவு செய்யவேண்டும். வேறு யாரோ முடிவு செய்யக்கூடாது.
 
சுயலாபத்துக்காக டாக்டர் கிருஷ்ணசாமி 'தேவர்மகன் 2' படத்தை எதிர்க்கிறார். தேவர் மகன் படத்தால் 25 வருடங்களாக தீராத பகை ஏற்பட்டுள்ளதாக  கிருஷ்ணசாமி கூறுவது பொய் " இவ்வாறு கருணாஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்