உங்க LOOK'கிற்கு கிளாமர் செட்டே ஆகல... ரித்விகாவிற்கு ரசிகர்கள் அட்வைஸ்!

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:01 IST)
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை என பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில்  பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர்  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் ஹீரோயினாக  நடித்தார்.

இதையடுத்து தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்க அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கருப்பு நிறத்தில் செமி மாடர்ன் உடையணிந்து அழகிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால்,  நேற்று அவர் வெளியிட்ட சில மாடர்ன் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ் ரித்விகாவின் LOOK'கிற்கு செட்டே ஆகவில்லை என ரசிகர்கள் கூறியதுடன் இனி இதே போன்று ஹோம்லி லுக்கிலே போட்டோ ஷூட் நடத்துங்கள் என அன்புக்கட்டளை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@profile_makeover @lopa_design_studio @dilipanphotography @chennai_jazz @mani_hairstylist

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்