படங்கள் வெளியீடு தியேட்டரா? ஓடிடி தளமா? எது பெஸ்ட் வெற்றிமாறன் பதில்

புதன், 9 செப்டம்பர் 2020 (20:19 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் கடந்த 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநரகாக அறிமுகம் ஆனார்.அதன் பின் இவர் இயக்கிய ஆடுகளம் தேசிய விருது வென்றது. மொத்தமே ஐந்து படங்களை இயக்கியிருந்தாலும் ரசிகர்களால் அதிகம் பேசப்படுபவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய அசுரன் பெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, சூரி நடிக்கும் படத்தையும் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தையும் அவர் இயக்கவுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் வெற்றி மாறன் உள்ளார் என்பதால் இதுகுறித்து ஒரு மீடியா சேனல் அவரிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், தான் விஜய்க்காக கதை எழுத ஆரம்பித்துவிட்டதாகவும் அவரது அழைப்பிற்காக காத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் சினிமாவை தியேட்டரில் படம்  வெளியாகாத நிலையில் படத்தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் எனவும்,  தியேட்டர் என்பது பெரிய படங்களுக்காக மட்டும் இருக்கும் சூழல் ஏற்படலாம் எனவும், சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால் அதைப் பொறுத்துதான் அதன் வீச்சைப் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்