கலிஜியா பேசுறியேம்மா... பலநாள் பகையை தீர்த்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:35 IST)
பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாறி ஒருவருக்கொருவர் மனதில் நினைப்பதை போன் மூலமாக வெளிப்படையாக கேட்கின்றனர். அத்துடன் தங்களுக்குள் இருந்த பகை , கோபம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த டாஸ்க் மூலமாக தீர்த்துக்கொள்கின்றனர். அந்தவகையில் முதல் ப்ரோமோவில் பாலாஜி மற்றும் அர்ச்சனாவுக்கு இடையில் நடந்த சண்டை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது. 
 
தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் சனம் ஷெட்டி சம்யுக்தாவுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வாய் திறந்தாலே கலிஜியாக பேசுவதாக சம்யுத்தா நக்கலாக கூறுகிறார்.
 
இதனால் செம கடுப்பான சனம் ஷெட்டி கேப்பன்ஷி டாஸ்க்கில் உங்களுக்கு சொந்த புத்தியே இல்ல என்றதும் சம்யுக்தா மற்றவங்களுக்கு நான் கேப்டனானது அவ்வளவு வெறுப்பா...? அது அவரவர்களின் வளர்ப்பு என இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி பகையை தீர்த்துக்கொள்கின்றனர். இது எங்க போயி முடியுமோன்னு தெரியல... ஆனால் இன்னைக்கு எபிசோட் சிறப்பா தரமா இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்