பாரதி ராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை பட புதிய ஸ்னீக் பீக் காட்சி!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:03 IST)
பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. வயதான தாத்தா, பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தன் பேர பிள்ளைகளை பார்க்க செல்லும் போது அந்த கலாச்சாரத்தில் அவர்களை பார்த்துக்கொள்ள எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை காட்டுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்