அடல்ட் காமெடியில் இளைஞர்களை குறிவைக்கும் "பப்பி" A படமில்லை!

வியாழன், 3 அக்டோபர் 2019 (16:01 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது "பப்பி" என்ற படத்தில் நடித்து வருகிறார். 


 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் இப்படத்தில் மொரட்டு சிங்கிள் நட்டு தேவ்  இயக்க்கியுள்ளார். இப்படத்திற்கு  தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். “பப்பி” படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
 
இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் வாரம் அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகும்.  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் மொரட்டு சிங்கிள், இது A படம் கிடையாது இது U படம். தயரிப்பாளர் ஒரு தந்தையை போல் தான் இருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன். யோகிபாபுவை  காக்கா முட்டை படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்கு தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப்படம் செய்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன் முழுத்திறமையையும் தந்துள்ளார். சம்யுக்தாவை இந்தப்படத்தில்  எல்லோருக்கும் பிடிக்கும். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்