மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள்– 300 க்கும் மேற்பட்ட வில்லாளர்கள் பங்கேற்பு

திங்கள், 3 டிசம்பர் 2018 (18:22 IST)
கரூர் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள வீனஸ் குளோபல் ஸ்கேம்பஸ் என்ற பள்ளியில் என்னுமிடத்தில், Field Archery Association சார்பில் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. வெள்ளியணை பாரதி பள்ளி தாளாளர் ஞானபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், டி.என்.பி.எல் பள்ளியின் முதல்வர் ஐயப்பன் இந்த போட்டியினை துவக்கி வைத்தனர்.



இந்த போட்டியில், சுமார் 22 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட வில்லாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 8  10., 12., 14 ஆகிய வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனிதனியாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்பு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வீனஸ் குளோபல் ஸ்கேம்பஸ் நிர்வாகி நதியா தங்கப்பதக்கங்களும், வெள்ளிப்பதக்கங்களும் கொடுத்தனர். இந்த  வில்வித்தை போட்டிக்கான முழு எற்பாடுகளை கரூர் மாவட்ட பீல்டு ஆர்ச்செரி அசோசியேஷன் செயலாளர் ரவிசங்கர் சிறப்பாக செய்திருந்தார். மேலும், தமிழர்களின் பண்பாடு வில்வித்தையும், சிலம்பக்கலையும் தான், அப்படி பட்ட வில்வித்தைகள் மீண்டும் புத்துணர்வு பெறுவது போல, இந்த போட்டிகள் அமைவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்