அதிர்ஷ்டத்தை மேன்மேலும் பெருக செய்யும் அதிர்ஷ்டக்கல்...!!

ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தையும் மேன்மேலும் பெருகச் செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும். நவரத்தினங்களில் தங்கள் பிறந்த எண்ணுக்கேற்ற அதிர்ஷ்டக்கல்லை வாங்கி, தங்கள் உடலில் படிம்படி அணிந்துகொண்டால், அந்த கற்களின் ஆற்றல் உடலில் பாய்ந்து, உடல் நலக் குறைபாடுகளைப் போக்குவதோடன்றி, அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித் தருகிறது. 
நவரத்தினகளில் மிகவும் முக்கியமான ரத்தினமாக கருதப்படுவது வைடூரியக்கல் ஆகும். வைடூரியக் கல் பார்ப்பதற்கு இருண்ட மஞ்சள் நிறம்  கொண்ட கற்களும் உண்டு. கேது பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள் 7,16,25 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வைடூரியக் கல் வைத்த  மோதிரத்தை அணிய வேண்டும். இதனால் வாழ்வில் ஏற்றமும் உயர்வும் உண்டாகும்.
 
மாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், உள்ள உறுதி நட்பு, காதல் பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது.
 
முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது  சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப்  பேறும் உண்டாகும்.
செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம். 
 
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.
 
நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது.
 
கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச்  செழிப்பும் உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்