பணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் !!

நீங்கள் நினைத்த அளவிற்கு வருமானம் பெருகி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். அது என்னவென்று பார்ப்போம்.

வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க, முதலில் வருமானம் பெருக வேண்டும். மகாலட்சுமி எல்லோரிடமும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை. யாரிடம் அவளுக்கு  பிடித்த அம்சங்கள் இருக்கிறதோ, அவர்களிடம் அவள் நிரந்தரமாக தங்குவாள். 
 
மகாலட்சுமிக்கு பிடித்த இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடங்களிலெல்லாம் வைப்பதால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடாக இருந்தாலும் சரி,  தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இருக்கும் கல்லாப் பெட்டியாக இருந்தாலும் சரி, பணம் வைக்கும் பீரோ, பெட்டி, லாக்கர், மணி பர்ஸ், ஹேண்ட்  பேக் போன்ற எதுவாக இருந்தாலும் சரி இந்த மூன்று பொருட்களை சேர்த்து அந்த இடத்தில் வைத்தால் மட்டுமே போதும். 
 
வேலை, தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் வைக்கும் இடங்களில் எல்லாம் இந்த பொருளை வைப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும்,  உற்பத்தித் திறனும், தொழில் விருத்தியும் நல்ல ஏற்றம் உண்டாகி முன்னேற்ற பாதையில் செல்லும்.
 
நம் வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும், திருப்பதி ஏழுமலையானின் தாடையில் தினமும் வைக்கப்படும் பச்சை கற்பூரம் தான் அது. 2 பச்சைக் கற்பூரத்துடன், 2  ஏலக்காய், 27 என்ற எண்ணிக்கையில் சோம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்துள்ள மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கயிறால் இறுக்கமாக கட்டி அதனை முக்கியமானஇடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். 
 
இதனை ஆறு வாரங்கள் வரை மட்டுமே வைத்திருந்து, அதன்பின் மீண்டும் புதியதாக மாற்றி விடுங்கள். இது உங்களிடம் இருக்கும் வரை உங்களுடைய வருமானம் படிப்படியாக பெருகுவதை கண்கூடாக பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்