ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!

ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் ஸ்ரீஜெயந்தி தினமாகும் இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விரதம்
 
ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி  பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 
எட்டு வகை கிருஷ்ணர்கள்: ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.
 
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபடுவர்.
 
குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை  போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
 
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்