மீன் வாங்க போன வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…

ஞாயிறு, 21 ஜூலை 2019 (10:09 IST)
தஞ்சாவூரில் மீன் வாங்க போன நபர் லாரி மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக குருவி கரம்பை பகுதிக்கு அருகே உள்ள மீன் மார்க்கெட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயத்தில் மீன் மார்க்கெட் அருகே, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக நீலகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே நீலகண்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீன் வாங்க சென்றவர் பரிதாபமாக லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்