பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்: மிருகத்தனமாக நடந்து கொண்ட ஆண்

சனி, 20 ஜூலை 2019 (11:05 IST)
விருத்தாச்சலம் அருகே ஒரு பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மனைவி செல்வி. இவர்களது மகன் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளை காதலித்து வந்ததால் ஒரு மாதத்திற்கும் முன்பு இருவரும் எங்கேயோ ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொளஞ்சி, செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி அந்த பகுதியிலிருந்த ஒரு மின்கம்பத்தில் கட்டி தாக்கியுள்ளார். பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து செல்வியை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கொளஞ்சியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் இவ்வாறு மிருகத்தனமாக கட்டிவைத்து அடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்